பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்..... 32?

பேராசிரியர் டாக்டர் ரா. பி. சே. அவர்கள் அருந் தமிழ்ச் செல்வர்; பெரும்புகழ்ச் செல்வர். அதஞலேதான் போலும் அவர் சொல்லின் செல்வர் என்று போற்றப் பெறுகின்ருர். சொல் என்ற சொல்லுக்கு எழுத்தே தனித்தும் தொடர்ந்தும்" பொருள் தரும் சொல் லென்றும், எஞ்சாத வாழ்க்கைக்குப் பின்னும் எஞ்சி நிற்கும் எச்சமாகிய புகழ் என்றும் இருபொருளும் உண் டன்ருே?" அந்த வகையில், இரு பொருளுக்கும் உரிய சொல்லின் செல்வராய்' விளங்கும் பேராசிரியர் அவர் களின் பெருந்தமிழ்த் தொண்டை ஆராயும் இக்கட்டுரை யில், அவர்தம் தொண்டின் பயனெல்லாம் தமிழகம் துரை அருள் பாலித்த, செப்.:தற்கரிய செழுஞ் சுடர்க் கடவுளே-அடியார் சிந்தையுட் புகுந்த செல்வத்தைசிவபெருமான-பரம்பொருளை-நாம் ந ன் றி , ட ன் தொழக் கடமைப் பட்டவர்கள் ஆவோம். அவ்வாறே தென்னுடுடைய சிவனருளால், எந்நாட்டவரும் போற்றப் பிறந்த மைந்தரை, ஆராக்காதலோடு பெற்று எடுத்து வளர்த்த அன்னையார் சொர்ணம்மாளையும், தந்தையார் பிறவிப் பெருமாள் பிள்ளையையும் நாம் வாழ்த்தி வணங் கக் கடமைப்பட்டவராவோம். அத்துடன், ஒப்பரிய வாழ்க்கைத் துணைவியாராய்ப் பொருந்திப் பல்லாண்டு களாய்ப் பேராசிரியர் அவர்கட்கு நலம் பாலிக்கும் திருமிகு ஆழ்வார் சானகி அம்மையாரையும் நாம் போற்றி வணங் கக் கடமைப்பட்டவராவோம்.

(4) அண்ணுமலேப் பல்கலைக்கழகத்தின் முன்னுள் துணை வேந்தர் திரு. தி.மு. நாராயணசாமிப் பிள்ளே அவர்கள் தலைமையில் செயற்பட்ட வெள்ளிவிழாக் குழு, இவ் வாறு பேராசிரியர் அவர்கட்குப் பலவகையாலும் செய்த பாராட்டு என்றும் போற்றி மகிழ்தற்கு உரியது.

107. நன்னுரல்-பதவியல்-1