பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟垒 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

படியுமாறு ஈர்த்துச் சென்றது அப்புலி. தன் அன்புடைய துணைக்கு அதை அளித்து மகிழ்ந்தது. அவ்வெற்றிச் செருக்கால் புல் தரையில் வீழ்ந்து புரண்டது. இத்தகைய கொடுமையுடையது அவ் வேழக்காடு. இதனை அறிந்த யானைகள், அக்கானுறை வாழ்வை வெறுத்து வழியில் கிடக்கும் பலாக் கனிகளைத் தின்துகொண்டே வெளி யேதும் என்று உம்பற்காட்டைத் தாயங்கண்ணனர் தாம் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல் ஒன்றில் சித்திரித்துக் காட்டுகிருர், உம்பற்காடு இந்நூறு சிற்றுார்களைக் கொண்டதொரு சிறுநாடு தன்னைப் பாடிய குமட்டுர்க் கண்ணஞர்க்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனல் பிரமதாயமாகக் கொடுக்கப்பெற்ற பெருமை வாய்ந்தது இப்பகுதி. செங்குட்டுவனிடம் இவ்வும்பற்காட்டின் வருவாயினைப் பரணர் பரிசிலாகப் பின்னுெரு காலத்தே பெற்ருர், இவ்வுண்மையை இரண்டாம் பத்தின் • தைத் தொடர்ந்துள்ள உரைநடைப் பகுதியாலும்

1. கொடுமு வீங்கை குரலொடு மிடைந்த

வான்முகை யிறும்பின் வயவொடு வதிந்த உண்ணுப் பினவி னுயக்கந் தீரிய தடமருப் பியானே வலம்படத் தொலைச்சி வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுதெறி பயிலிருங் கானத்து வழங்கல் செல்லாது பெருங்களிற் றினநிரை கைதொடுஉப் பெயருந் தீஞ்சுளைப் பலவின் தொழுதி யும்பற் பெருங்காடு.......... (அகநானூறு, 357) 2. உம்பற்காடு-திருவிதாங்கூர் மாநிலத்தின் வடமேற்கி லுள்ள யானைமலைப் பகுதியாம் என்றும், வைக்கத்துள்ள ஒரு வீட்டிற்கு உம்பற்காட்டு வீடு என்ற வழக்கு இன்றும் உள் sitä ersärsyth sa galíř, (Cera Kings By K.G. Sesha Aivar,

P.4.)