பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2క8

ஆலயங்களும் என்னும் பொருள் பற்றிக் கருத்துச் செறிவும் கவர்ச்சியும் மிக்க உரை ஆற்றினர். .

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திரினம்பாவை என்னும் பெயரில் இன்றும் தாய்லாந்தில் இருப்பதாகவும் திரியெம்பாவை விழா எனக் கொண்டாடப்படுவ தாகவும், அது தமிழரின் திருவாதிரைத் திருநாள்தான் என்றும் கூறினர்.................. நெய், பவளம் போன்ற பல தமிழ்ச்சொற்களும் அதே பொருளில் அவர்கள் மொழியில் வழக்கிலிருப்பதாகவும் அவர் கூறினர்.

பிற்சேர்க்கை-5 ஹவாய்த் தீவுகளிலும், பொதுவாகப் பசிபிக்குப் பெருங்கடலின் தீவுகளிலும், நம் சங்ககாலப் பழக்கவழக் கங்களிற் சில இடம்பெறுவது ேதான்றுகின்றது. மலர்களை அகவொழுக்கத்திற்கும் புறவொழுக்கத்திற்கும் அறிகுறி களாகக் கையாண்டு வருகின்றனர்.'

தவத்திரு தனிநாயக அடிகளார். தமிழ்த் தூது (1952) பக் 21. கீழ்த்திசை நாடுகளில் தமிழ்ப்பண்பாடு மிகவும் பழமையான காலத்திலேயே பரவியது. சாவகம், சுமத் திரா போன்ற இடங்களில், இரண்டாம் நூற்ருண்டுக்கு முன்னரே தமிழ் மக்கள் குடியேறியிருக்க வேண்டு மென்பது கெல்டோன் போன்ற அறிஞர்களின் கருத்து. தமிழ்நாட்டிலிருந்து மரக்கலங்கள் அந்நாடுகளுக்குப் பண்டு சென்று வாணிகம் நடத்தின என்றும், வாணிகம் நிலைபெற்று நீண்டநாள் நடந்தது என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கருதுகிருர்கள். இன்றும், சுமத்திராவில் வாழ்ந்துவரும் காலோ பட்டாக் வகுப்பினரின் உட்பிரி, வினராயிருக்கும் சிம்பிரிங் என்போர்.தம்மைச் சோளியர், சேரர், பாண்டியர், கலிங்கர் என்று. வகுத்திருக்கின் தனர். . ... . .