பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感莒

சாவகத்தில் எமுப்பப்பெற்றிருக்கும் பிரம்பாளுள்' எனும் கோயில், சைவ சித்தாந்தத் தத்துவங்கள் அடிப்படை யாகக் கொண்ட கோயில் என்பர். அதே போன்று. "தியங்’ சமவெளியில் உள்ள கோயில்கள் பலவும். பனத்தரான்’ கோயிலும், கணபதி அகத்தியருடைய கணக்கற்ற சிலே களும், திராவிடத் தென்னிந்திய மக்களின் கட்டடச் சிற்பக் கலைகளை ஒட்டியே அமைக்கப்பெற்றவை.

இந்தோனேஷியா மொழியில் வழங்கும் சொற்கள் பல, அம்மக்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வாணிகத் தொடர்பைக் குறிப்பன. எடுத்துக்காட்டாக, கப்பல்” என்பதைக் கபல் என்கின்றனர். அவர் வழங்கும் வேறு சில தமிழ்ச் சொற்கள் வாடை', 'சுக்கு, இஞ்சி, கஞ்சி' கொத்துமல்லி, குதிரை, கூடை, பெட்டி', 'பிட்டு,ப் போன்றவை. தாலி என்ற சொல்லைக் கொடி என்ற பொருளிலும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அம்மா', அக்கா மாமா, தம்பி போன்ற உறவுச் சொற்களும் அங்குப் பேச்சு வழக்கில் உள.

பாலித்தீவின் பண்பிற்கும் சமூக வாழ்விற்கும் இந்து சமயமே அடிப்படை. அங்கிருக்கும் ஒரிடத்திற் குக் கப்பல் என்பது பெயர். அவ்விடத்தில் தமிழ் நாட்டுக் கப்பல் ஒன்று கரையில் மோதுண்டு உடைந்த தாகக் கூறுவர். பொதுவாகத் தென்கிழக்குத்திசை நாடு களின் இசையும், நாட்டியமும், நிழற்கூத்தும் இந்தியக் கலைகளுடன் தொடர்புடையனவென்று கருதுவதற்கு இடமுண்டு................. இடங்களுக்குச் சென்ருல், அங்கு நான் காணும் தமிழரின் சின்னங்கள் இன்னும் பெரு வியப்பைத் தருகின்றன.

வியட்னுமின் துரானில் இருக்கும் பழம்பொருட்சாலை யில் உள்ள நந்திகளைப்போல் அழகுவாய்ந்த நந்திகளைத் தமிழ் நாட்டில் நான் கண்டிலேன். மேலும், வியட்னுமின்