பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑿證

அங்கோரை நிறுவிய கிமோரின் வழித்தோன்றல் களைக் கண்டு பேசவேண்டுமென்று. அவர்கள் வாழும் சில சிற்றுார்களுக்குச் சென்றேன். பிரன்ச் மொழி சிறிதறிந்த சிலருடன் உரையாடலானேன். ஆளுல் அவர்கள் தாராளமாகப் பேசவில்லை. தம் மொழியில் குதிரையை "மா" என்றும், கப்பலைக் கப்பால் என்றும் கூறுவதாகத் தெரிவித்தனர்.

வியட்நாமின் கிழக்குப் பகுதிக்குச் சென்ருல், அங் குள்ள பெரு வீதியின் ஒரத்தில் சாம்பர் கட்டிய பல தனிக் கோபுரங்கள் தோற்றமளிக்கும். இக் கோபுரங்கள் பெரும் பாலும் மாமல்லபுரக் கோபுர மரபில் கட்டப்பட்டவை.

நடுச் சாவகத்திலும் கிழக்குச் சாவகத்திலும் உள்ள பொருட் காட்சி நிலையங்களில் கணக்கற்ற நந்திச் சில களும், சிவபெருமான் சிலைகளும், அகத்தியர் சிலைகளும் காணப்படும். தமிழ்நாட்டுடன் இந்தோனீசியர் வைத்த தொடர்பு மிகவும் அழுத்தமான தொடர்பு என்பதற்கு அங்குள்ள பல்லவ முறைச் சிற்பங்களும் கோயில்களும் சான்றளிக்கின்றன.

பாலியில் கோயிலைக் கூயில் என்று அழைக்கின்றனர். பதினரும் நூற்ருண்டில் ஐரோப்பியர் முதன் முதல் அந்நாட்டிற்குச் சென்றனர். கிறிஸ்தவ திருத் தொண்ட ரும் தம் திருமறையைப் பரப்புவதற்காக அந்நூற்ருண்டி லேயே அங்குச் சென்றிருந்தனர். அவருள் தலைசிறந்தவர் துசய சவேரியார் ஆவர். சவேரியார் ஜப்பானுக்கு முதன் முதற் சென்ற பொழுது, தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன் அவருடன் சென்றனன் எனக் கூறப்பெற்று வருகின்றது. இவர்கள் எனக்குப் பசிபிக் தீவுகளில் வழங்கும் சில பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டுப் பழக்கவழக்கங்களைப் போலத் தோன்றின என்று அறிவித்தனர்.

எதியோப்பியப் பகுதிப் பேராசிரியர் ஒர் ஐரோப்பி யர்; இவர்பன்மொழிப் புலவரும் ஆவார் என்னுடன்