பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தி-ைகவினுற எடுத்துக்காட்டுகின்றன. ஐவகை நிலங் களின் வளங்களையும் அவர் பாடியுள்ள திறன் மகிழ்ந்து போற்றற்குரியது.

மருதம் :

நீர்வளம் நிறைந்த பகுதி மருதம். ஆங்கே மருத மரங்கள், தம்பால் பல புள்ளினம் தங்கி ஒலிக்க ஓங்கி தித்தும் செறிவினையுடைய, பெரிய பரப்பிடமாகிய மணல் மலிந்த பெருந்துறைக்கண், விளையாடும் இளமகளிரால் பூவும் தளிரும் பறிக்கப்படுதலால் காஞ்சி மரங்கள் சிதைந்த திலையில் காட்சி அளிக்கும், முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த நெருப்புப் போலத் தோன்றும். அடைகரையில், சங்குகளும்?நாரை களும் செவ்விய வரிகளுடைய நாரையினத்துப் பறவை களும் திரியும். கழனிக்கு வாயிலாக உள்ள பொய்கை யைச் சார்ந்த விளைநிலத்தில் அழல்போலும் பூவினை உடைய தாமரை மலர்ந்திருக்கும். வளையணிந்த விக்ளயாட்டு மகளிர் பறியாமையால் தாமே மலர்ந்த ஆம்பல் எங்கும் நிறைந்திருக்கும். இத்தகைய காட்சிகள் நிறைந்தது, நீங்காத புது வருவாயுடைய அகன்றலை நாடு.

" மருதிமிழ்த் தோங்கிய நளியிரும் பரப்பின்

மணல்லிை பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை நஇது காரையொடு செவ்வரி உகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழல்மருள் பூவின் தாமரை வளமகள் குரு.அது மலர்ந்த ஆம்பல் அரு.அ யாணரவர் அகன்றலே நாடே."

(பதிற்றுப்பத்து, 23:18-25) மருதவள நாட்டில் நீர் வளம் இடையருமல் இருத்த வின், காலமல்லாத காலத்தும் கரும்பு முற்றிக் கிடக்கும்,