பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 3?

' காந்தளங் கண்ணிக் கொலேவில் வேட்டுவர்

செங்கோட் டாமா னுளுெடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை கியமத்துப் பிழிகொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்.’’

(பதிற்றுப்பத்து, 30:9-13) வில்லும் அம்பும் கொண்டு விலங்குகளே வேட்டை யாடித் திரியும் பண்பினரே குன்றக் குறவர். அவர்கள் மனைகளும் எளிய மனைகள்; ஆயினும், அவை அன்பின் உறைவிடங்கள். குறவர் தம் மினைகளை வரகின் வைக்கோ லால் வேய்ந்திருப்பர். அவர்கள் தொழில்களுள் முதன் மையானது தினக்கொல்லையை உழுது பயிர் செய்வ தாகும். அவர்களுடைய அன்பகங்களில் மணமிக்க காட்டு மல்லிகை வளரும், அன்பு பொங்கும் அவர் தம் இல்லங்களில் நடைபெறும் இல்லறத்தின் சிறப்பு இனே யில்லாததாகும். தம் வீட்டிற்கு வரும் விருந்தினர்க்குத் "தன்னே உண்டாரை வேறெதுவும் உண்ண விரும்பாத வாறு செய்யும் சுவையும், கருப்புக் கட்டியைப் பொடி செய்து கொழித்தெடுத்த நுண்ணிய பூழி போலும் தோற்றமும் உடைய மெல்லிய தினமாவை, ஆர்வத் தோடு வரும் விருந்தினர் அனைவர்க்கும் முறைமுறையாக வேண்டுமட்டும் அளித்து மகிழ்வர்.

ஏனல் உழவர் வரகுமீ திட்ட

கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றின நுவண முறைமுறை பகுக்கும் புன்புலங் தழீஇய புறவணி வைப்பும்.’’

(பதிற்றுப்பத்து, 30:22-25)

நெய்தல்

அலை மோதும் கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல், ஏனைய நிலங்களுக்குச் சிறிதும் இளேக்காத வளம்