பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 3é

அயிரை மலை:

இனி, ஒரு நாட்டுக்குச் சிறந்த அணிகலன்கள் அரண் கள் என்று ஆன்ருேரால் போற்றப்படும் மலை அழகினை யும் ஆற்று வளத்தையும் ஆசிரியர் எவ்வாறு போற்றி யுள்ளார் என்று நோக்குவோம். சேரநாட்டைச் சேர்ந்த மலைகளுள் அயிரை மலை" சிறப்பு வாய்ந்ததாகும். இதனைச் சூழ்ந்த பயந்தழி இய நாட்டைத் தம் வயமாக் கிக்கோடலை விரும்பிப் போதரும் பகை வேந்தர் போர் செய்து எளிதில் மேல்வாராவாறு குறுக்கே அரண்போலச் செங்குத்தாய் நிற்கும் இம்மலை."

வற்ருத வளங்கொழிக்கும் தமிழகத்து ஆறுகளுள் ஒன்று பேரியாறு ஆகும். இவ்வாற்றின் அழகை, கோங்கம் வேங்கை தூங்கினர்க் கொன்றை நாகந் திலக கறுங்கா ழார முதிர்பூம் பரப்பி னெழுகுபுன லொளித்து மதுகர ஞமிளுெடு வண்டினம் பாட கெடியோன் மார்பி லாரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாறு.........'

(சிலப் : 25, 17.27)

1. (!) இருபுனலும் வாய்ந்த மலேயும் வருபுனலும்

வல்லரணு நாட்டிற் குறுப்பு (குறள்: 737) {ii) மணிநீரு மண்ணு மலேயு மணிநிழற்

காடு முடைய தரண். (குறள்: 742)

2. (i) இது யானைமலைத் தொடர்களுள் ஒன்று; ஐவர்மலை என்று இக்காலத்து வழங்குவது. சேரவேந்தர் செய்யுட் கோவை பக்கம், X.

(ii) Cera Kings: Κ. G S. Aiyar, p, 15. 3. "சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருத:

(பதிற்றுப்பத்து, 21: 28-29)