பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

遂器 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பேயும் சிற்றெறும்பும் உண்ண அஞ்சும் பலியையும் உண்ணும்.'

12. மரவகை, கொடிவகை, மலர் வகை

தாவர உலகின்மீது சங்கத் தமிழ்ப் புலவர் கொண் டிருந்க காதல் தணியாக் காதல் ஆகும். வாய்ப்பு நேர்ந்த வழியெல்லாம் அவர்கள் ஓங்கி உயர்ந்த மரங்களையும் பரவிப்படர்ந்த கொடிகளையும், அழகே வடிவான மலர் களேயும் வருணிக்கத் தவறியதில்லை. அவ்வருணனைகளும் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த பெருமை யுடையனவாகவே விளங்கல் சங்கத் தமிழின் தனிச் சிறப்பாகும்.

பாலைக் கெளதமஞர் தம் பாடல்களில் மரவகை களும், கொடி வகைகளும், மலர் வகைகளும் அளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள மணல் மலிந்த பெருந்துறைகளில் மருத மரங்கள் தம்பால் பல புள்ளினங் கள் ஒவிக்க ஓங்கி நிற்கும். அவற்ருேடு காஞ்சி மரங்களும் சிறு மகளிரால் சிதைவுண்ட கோலத்தோடு காட்சி அளிக் கும். காஞ்சி மரங்களைப் போன்றே தாழநின்று பூக்கும் இயல்புடைய முருக்க மரங்களின் மலர்களை மகளிர் கொய்து சிதையாராகலின், அவை கீழே வீழ்ந்து வறிதே கிடைக்கும்.

நெய்தல் நிலத்தில் ததைந்த ஞாழல் மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்து காணப்படும் கானற்சோலை

i. பதிற்றுப்பத்து, 30 : 39. 2. பதிற்றுப்பத்து, 23 : 18-20. 3. பதிற்றுப்பத்து, 30 1, 3,