பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்றும் பத்து 43

யின் கரையில் தாழ இருக்கும் அடும்பங்கொடியைத் திரை அலைத்து ஒதுக்கி இருக்கும். பீர்க்கங்கொடிகள் பாழ்மனை வேலிகளில் படர்ந்திருக்கும்."

கார் காலத்தில் மலர்ந்து கற்புடை மங்கையர் போற்றி அணியும் முல்லையும், மகளிர் கைபோலும் காந்த ளும், நெருப்பை ஒத்த நிறம் படைத்த முள்ளுமுருங்கை மலர்களும், தாமரை மலர்களும், விளையாடு மகளிர் பறிக்க இயலாத வகையில் பழனத்தில் மலர்ந்திருக்கும் ஆம்பலும், இடையருது மலர்ந்த குவளையும், வளைக்கை மகளிர் கொய்யும் வள்ளையும், நீலநிற நெய்தற்பூக்களும் பாலைக் கெளதமஞர் பாடல்களில் வழங்கும் காட்சி யின்பம் கண்டு களித்தற்குரியதாகும்."

பழந்தமிழ் நாட்டின் நானில வளத்தைப் பாலைக் கெளதமனர் சித்திரித்துள்ள பகுதிகளைப் பார்த்த போதும், கொங்கு நாட்டைப் பற்றியும் பூழிநாட்டைப் பற்றியும் ஆராய்ந்த போதும் பல்வகை நிலப்பகுதிகட்கும் உரிய மக்களின் வாழ்க்கையை ஒருவாறு கண்டுள்ளோம். ஈண்டுப் பழந்தமிழ் நாட்டுச் சமூக வாழ்க்கையில் இன்றி யமையாத இடம் பெற்றிருந்த வேறு சிலரைப் பற்றி மட்டும் காண்போம்.

13. மக்கள் இனம்

அந்தணர் :

ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலும் உடையராய் இருந்

1. பதிற்றுப்பத்து, 30 : 6.

2. பதிற்றுப்பத்து, 26 : 1.0.

3. பதிற்றுப்பத்து, 21 ; 33; 21; 33; 23; 29; 23; 23: 23: 24; 27: 2; 27: 3; 29:2; 30; 2,