பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喹 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தனர். அந்தணர். போர்ப்பார்க்கன்றிப் பிறர்க்குப் பணி பறியலேயே" என்று அரசர்களே நோக்கிப் புலவர் பாடும் தகையதாய் அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது.'

வேள்விகள் இயற்றும் வழக்கம் சங்ககாலக் தமிழகத் திலேயே மலிந்துவிட்டது என்றல் மிகையாகாது. அவ்வாறு அந்நாளில் வேள்வி இயற்றிய பெரியார் சொல்லிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தையும் சோதிடத்தையும் வேத ஆகம நூல்களையும் மாசறக் கற்றிருந்தனர். கற்ற கல்வியின் பயனுகப் பிற உயிர் கட்குத் தீங்கு செய்வதை நினைப்பிலும் கொள்ளாத நற்றவத்தோராய் அவர் திகழ்ந்தனர். பகலவனை ஒத்த வாய்மை நெறி வழுவாத வீரர்களாய் இருந்த அவர்கள் வேள்வித் தீ மூட்டி வழிபாடு ஆற்றுங்கால் அவர்கள் உள்ளத்தெழுந்த விருப்பம் மெய்யின்கண் பரந்து வெளிப் படும்.”

வீரர் :

பண்டு தமிழ் நாட்டின் வேலியாய்த் திகழ்ந்தவர்கள் வீரர்களே. புலித்தோலால் ஆகிய உறையில் புலால் நாறும் தங்கள் வாளை வைத்திருப்பார்கள்: நாளும் போரை விரும்புவார்கள்; வலக்கையில் வாளுயர்த்திப் பகைவர் அரண்களை அழித்து வெற்றி கொள்வார்கள்." எமனை ஒத்த மொய்ம்பும் பின்னிடாப் போர்த்தொழிலும் உடையவர்கள். பிளத்தற்கு அரிய பகைவரின் யானைப் படையையும் பிளந்து உட்புகுந்து போருடற்ற வல்லவர் கள். குருதிக்கறைபடிந்த கழற்காலும் கடுமாப்போலும் விரைந்த செலவுமுடைய வீரர்கள் அவர்கள்.

1. பதிற்றுப்பித்து. 24 : 6–8. 2. பதிற்றுப்பத்து, 21 : 1-7. 3. பதிற்றுப்பத்து, 24 : 2-5,