பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை'களாக அவை விளங்கும். அவற்ைறக் கயிறுகுறு முகவை' என்று கவிஞர் சிறப்பித்துள்ளமையால், அச்சொற்ருெடரே இப்பாட்டிற்குப் பெயராயிற்று.

3. ததைந்த காஞ்சி:

விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கொய்தலால் சிை தவுபட்டுக் கிடக்கும் காஞ்சி மரத்தைத் ததைந்த காஞ்சி என்ருர் புலவர். அச்சொற் ருெடரே இப்பாட்டிற்கு அமைந்த பெயர் ஆயிற்று.

4. சீர்சால் வெள்ளி:

ஏனைய கோளினும் நாளிலும் வெள்ளி மிக்க வொளி யுடையது. இது சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்குதலின், வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி' என்றும், அது மழை வளந்தரும் கோள்களுள் தலைமை யாயதாதலின், சீர்சால் வெள்ளி யென்றும் வழங்கும் சிறப்புடையதெனினும், ஏனேக் கோள்களுடன் கூடியிருந் தாலன்றி மழைவளம் சிறவாமை தோன்றப் பயங்கெழு பொழுதொடு ஆதியம் நிற்ப என்று விதந்தும் கூறியுள் ளார் ஆசிரியர். இத்தகைய பெருமைக்குரிய சீர்சால் வெள்ளி பாட்டிலும் பெற்றுள்ள சிறப்பிடம் கருதி இச்சொற்ருெடரே இப்பாட்டிற்குப் பெயராயிற்று.

5 கானுணங்கு கடுநெறி

காட்டுத்தீயால் வெந்து கரிந்து கிடக்கும் நிலத்தில் உள்ள அஞ்சத்தக்க வழியை, கானுணங்கு கடுநெறி' என்று ஆசிரியர் கூறியுள்ளமையான், இப்பாட்டிற்கு இச் சொற்ருெடரே பெயராயிற்று.