பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醇

மிக உயர்ந்த சிறந்த நடைபற்றிய அவருடைய கருத்துகள் சிலவற்றில் எனக்கென்று சில தயக்கங்கள் இருந்தாலும், இப் பொருள் பற்றி இதுவரை தமிழில் எழுதப்பட்ட எவற்றினும் இதுவே மிகச்சிறந்த கட்டுரை என்று எளிதில் கூறலாம் என்று எண்ணுகிறேன். பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளையை நேரிற்கண்டு பழகும் பேற்றினைப் பெற்ற யான், அவருடைய வாழ்வும் தொண்டும்பற்றி விளக்கமும் வழிபாட் டுனர்ச்சியும் நிறைந்த கட்டுரையைப் படித்துப் பேரின்பம் பெற்றேன். இதைப் போன்றே இந்தத் தொகுதியிலுள்ள மற்ற இரு கட்டுரைகளும் சிறப்பு வாய்ந்தனவும் புது வழி திறப்பனவும் ஆகும்,

ஆராய்ச்சி நோக்கும், ஊற்றமிக்க தமிழ்க்காதலும், ஒல்லும் வகையெல்லாம் சிறந்த நடையில் எழுதவேண்டும் என்ற உணர்வும், இணைந்தும் இழைந்தும் விளங்கும் இத் தகைய சிறப்பு மிக்க நூல்கள் இன்னும் பலவற்றை வருங் காலத்தில் திரு. க. சஞ்சீவி அவர்கள் வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

டாக்டர். கமில் சுவெலபில், சி. எஸ்.சி., கீழகக்கலை ஆராய்ச்சிக் கழகம், பிராகுவா.

தமிழாக்கம் : பேராசிரியர்

க. த. திருநாவுக்கரசு, எம். ஏ., எம். லிட்., டிப். மொழியியல், திருக்குறள் ஆராய்ச்சித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

(இப்போது இணைப்பேராசிரியர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை)