கூவு ஆரிபுநாயக வசனம். ஜாஜத்து, கிலாபத்து க்களின் கிற்கா க்களைப் போர்த்தினார் கள். அங்கொருபக்கத்தில் தங்கள் பாட்டனாராகிய சையி து யஹ்யா அவர்கள் நிற்கக்கண்டு, அவர்களிடத்துப்போய் ஸலாம் சொல்லிக் கையைத்தொட்டு முத்தம் இட்டார்கள். அதற்கு அவர்கள் பிரதிகூறி " ஸாலிஹான மகனே, ஆரி பான பிள்ளையே, உமக்குச் சோபனம் என்று வாழ்த்தி னார்கள். அதன் பின்னர், சைகு ஜுனைதுல் பகுதாதி, சை குல் ஆரிபு அபா யஜீதுல் புஸ்தாமி, ஸிற்றியுஸ்ஸிக்தி, சைகு மஉறாபுல் கர்கீ, ஹபீடல் அஜமி றவியல்லாகு அன்கும் இவர் களையும், இன்னும் அநேக ஔலியா க்களையும், நாயகமவர் கள் கண்டார்கள். அவர்களெல்லாம் நாயகமவர்களுக்கு ஸ லாம் சொல்லி "மகத்துவம் உள்ள மஹ்பூபே, மறுஹபா என்று வாழ்த்தினார்கள். நாயகமவர்கள் அவர்களுக்குப் பிரதி ஸலாம் சொல்லிவிட்டு, வேறு அஜாயிபு, அன்வாறு அஸ்றாறு களையும், மலாயிக்கத்து களையும் கண்டார்கள். 731 ஐந்தாம்வானத்தில் இவை நிகழ்ந்தபின், ஸம்ஸாயீல் நா யகமவர்களைத் தூக்கிக்கொண்டு ஆறாம்வானத்திற்குப் பறந் து போனார். போய் அதன் கதவைத்தட்டினபோது, அங் கிருக்கும் மலக்குகள் இன்னார் வந்திருக்கின் றார்கள் என்ப தைக் கேட்டுக்கொண்டு சதவைத்திறந்தார்கள். நாயகம் வீர்களை அவ்வானந்துள்ளே கொண்டுபோய் ஸம் லாயில் இறக்கினார். அங்குள்ள மலாயிக்கத்து கள் எதிரேவந்து ஸலாம் கூறி " மஹ்பூபல்லா, உம்மை உம்முடைய ஹப்பு தரிசிக்கநாடி வழிபார்க்கின்றான்; விரைந்து போவீராசு என்றார்கள். நாயகமவர்கள் அவர்கள் ஸலாத் திற்குப் பிரதிகூறிவிட்டு, அங்கே நபி மூஸா அலைகிஸ்ஸலா மவர்க ளைக் கண்டார்கள், கண்டு ஸலாம் சொல்லிக்கொண்டு நெ ருங்கி, அவர்கள் கையைப்பிடித்து முத்தம் இட்டார்கள். அவர்கள் நாயகமவர்களுக்குப் பிரதி ஸ்லாம் கூறி " ஸாலி ஹான சகோதரரே, ஆரியான ஒலி யே, உமக்குச் சோபனம் 37
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/117
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை