பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுக ஆரிபுநாயக வசனம். மாரி அத்தேசம் முழுவதையும் சூழவளைந்து பெய்தபடி. யால், அங்கங்குள்ள நதிகளெல்லாம் பிரவாகித்தன. ஓ டைகள் முழுதும் நிரம்பின. கால்வாய்களில் பன்னீர் நிறைங் தோடிச்சென்று வயல்களிற் பாய்ந்து ததும்பிற்று. மதகு தோறும் நீர்பாயும் ஓசை மத்தளம்போல ஒலித்தது. ம யில்கள் நீலக்கலாபம் விரித்து நின்று ஆட, குயில்கள் ம க்கிளைக களிலிருந்து இனிய குலுடன் கூவ, ஈறுமலர் செறிந்த சோலைகளெல்லாம் செழித்தன. அசன்று ஆழ்ச் த குளங்கள் நீர்தேங்கித் தாமரையும் அல்லியும் நீலோற் பலமும் படர்ந்து, கண்ணுக்கு இனிமையாய்த் தோன்றி ன. மழையின் றி முடியுந்தறுவாயில் நாங்கள் வருந்தாநிற்ப எங்களை உயிர்வாழ்விக்க மழைபெய்வித்த நாயகமவர்க ளின் சீரும் சிறப்பும் மேன்மேல் ஒங்குக வன்று பறவைக் ளெல்லாம் களிப்புற்று ஆர்த்தன. மேய்தற்குப் பசும்புல் லும் பருகுதற்குத் தண்ணீரும் அற்று நாங்கள் மடியக்கி டந்தோம்; நாயகமவர்கள் பேரருள்சுரந்து பெய்வித்த ம ழையால் இப்போது உயிர்பெற்றோமென்று விலங்கினங்க ளெல்லாடிகளித்துநின்று விளையாடின. பூமியே களிகூர்ந் தவண்ணம் எங்கும் பசுமைநிறங் கொண்டு தோற்றிற்று. தானியவர்க்கம் பயிரிடுவோர் தத்தம் வேலைகளில் முயன்றனர். காய்கறிகளாதிப் பலவகைப் பொருள்களும் விளைப்போர் அவ்வவ்வேலையை ஆரம்பித்துக் கொண்ட னர்.. நாயகமவர்களின் அற்புத மகிமைகொண்டு பன்னீ ராய்ப்பெய்த நீராதலால், விளைச்சல் முன்னிலும் அதி கப்பட்டது. விளைபொருள் முழுவதும் மிகச் செழிப்பாய் விளைந்தன. வளம் குன்றாது என்றும் ஒரேதன்மையாயிருக்கும் செழிப்பான இறாக்கு தேசம் சிலகாலம் செழிப்பற்றுப் பஞ்சத்தாற் கலக்குற்றிருந்து, பின் நாயகமவர்கள் பொ ருட்டுச் செழிப்புற்றுச்செல்வம் பொலிந்தது. வாடி வதங்