பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகவு ஆரிபுநாயக வசனம். அவர்கள் மீது அவன் முழுமையும் தஜல்லி யாயிருப்பாள். அப்போது அவர்களை நீர் பார்ப்பது அக்கினிமயமாயிருக் கும் இரும்மைப் பார்ப்பதுபோலாம். ஆதலால், நான் சொன்னது பாயமான சொல்" என்று வதில்கூறினார் இதனைக்கட்ட அபுல் பறக்காத்து: அப்படியானால், நான் அவரைப்பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி ஊட்காந்தார். சற்றுநேரஞ் சென்றபின், நாயகமவர்கள் மு ஷாஹதா வில் நின்று தெளிவுபெற்று, தங்கள் இரசையும் முகத்தையும் கருப்புப்புடவை போர்த்து முடிக்கொண்டு அறையைவிட்டு வாசலில் வந்தார்கள். வந்துநின்று, தங் கள் திருமுகத்து ஆடையை மெல்ல நீக்கினார்கள். சிப்பொழுதில் கதிரெறித்து நின்ற சூரியனை மறைத்த கார்மேகம் விலகினபோது அச்சூ சூரியன் சுடர்விட்டு எ றிப்பதுபோல, நாயகழவர்களின் திவ்வியவதனம் பளீ ரென்று சோதிகான்றது. அந்நேரத்தில் அபுல் பத்ஹு அ புல் பறக்காத்தை கோக்கி "இவர்கள்தாம் எங்கள் சைகுற லியல்லாகு அன்கு” என்று சுட்டிக் காட்டினார். காட்டின போது, அபுல் பறக்காத்து நாயகமவர்களை ஏறிட்டுப் பார்த் தார், நாயகமவர்களின் தரிசனம் அவர்மீது தாக்கிற்று. காயகமவர்கள் சுத்தமான பளிங்குபோன்று அல்லா குத் தஆலா வின் தஜல்லி பிரதிவிம்பிக்க இயல்பான பார் வைகொண்டு பார்த்தபோது, அபுல் பறக்காத்து பம்பு ரம்போலச் சுழன்று கீழேவிழுந்து மரண மடைந்தார். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரந் தடவை அல்லாகுத் தஆ லா வைக்கா ணும் அவர் நாயகமவர்களை ஒரேதடவை கண் டவுடன் விழுந்து மாண்டதை அடல் பத்ஹு தெரிந்து, நாயகமவர்களிடத்து அவர் சொன்னவற்றைச் சொல்லி, இறந்த காரணம் யாது? எனக் கேட்டார். நாயகமவர்கள் அவர்க்குச் சொல்கின்றார்கள்:-