பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவர்க்கம் விற்றது. உக ளுள் பிரதானமானவர். இன்னும், அவ் யூனியாவில் சைகு இஸ்மாயீல் என ஒரு தனிகர் இருந்தார். இவர்க்கு அல் வூரில் அலங்காரமான தோட்டம் ஒன்று இருந்தது. அத் தேசத்துத் தோட்டங்கள் எல்லாவற்றுள்ளும் இதுவே சி றந்தது. இத்தோட்டம்போல மற்றொரு தோட்டம் எங் கும் இன்று, பல தேசங்களிலும் உள்ள பலவகைக் கனி களைத் தருகின்ற எல்லாச் சாதி மரங்களும், நானா தேசத் துப்புஷ்பங்களையும் புஷ்பிக்கின்ற எல்லாச்சாதிச் செடிக ளும், தேசங்கள் தோறும் தூதனமாயுள்ள அநேகவித விருக்ஷங்களும் அங்குண்டு, பலவகைத் தானியங்களும் அதனுள் விளையும். உலாத்திற் பயிராகும் எந்தப்பொரு ளும் அங்குப் பயிராகும். இத் தோட்டத்தில் இன்னது இல்லை என்று ஒருவர் சொல்லமாட்டார். இவ்வகை மேம் பாடான அத் தோட்டத்தை மேலேசொன்ன சைகு இஸ் மாயீல் வெகு பக்குவத்துடன் பேணிக்காத்து அநுபவித் துக்கொண்டிருக்கின்றார். இத்தோட்டத்தை நாம் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் முன்னேசொன்ன கத்தீபு, ஜமாலுத்தீனுக்கு உண்டாயிருந்தது, பலநாள் இவ்வெண் ணம்வைத்திருந்த அவர் ஒருநாள் புறப்பட்டு சைகு இல் மாயில் வீட்டிற்குப்போய்ப் பல விஷயங்களையும்பற்றிப் பேசிக்கொண்டிருந்து, கடசியாக "சைகே, தங்கள் தோட் டத்தை யார்க்காயினும் விற்பதாயிருந்தால், அதனை எனக் குக்கொடுங்கள். அதன் கிரயத்தை நான் தருகின்றேன்" என்று சொன்னார். இவர்சொன்ன இச்சொல்லை சைகு இஸ்மாயீல் கேட்டு "ஜமாலுத்தீனே, என்தோட்டம் அரும் பெரும் பலன்களை பெல்லாம் எனக்குத் தராநின்றது. ஆத் லால்,அதனை ஒருவர்க்குவிற்க நான் பிரியப்படமாட்டேன். அது விற்கப்படுவதும் அன்று’ என மறுமொழிசொன் னார். இதனைக் கேட்டுக்கொண்டு ஜமாலுத்தீன் மணைக்குத்