14) உபாத்து. யகமவர்கள். சமூகத்தே அறிவுகேட்க அன்றுவந்து நிறைந் திருந்தார்கள். சுத்தேஅ நாயகமவர்கள் அன்றைத்தினம் அவர்களெல்லார்க் கும் உலகம் இன்ன தன்மையானது என்றும்; அவற்றில் உள்ள பொருள்கள் இவ்வகைப்பட்டவை என்றும், உல கத்தால் உண்டாகின்ற குழப்பங்கள் இன்னவை என்றும், அக்குழப்பத்திற்குள் அகப்பட்டவர் அடையும் கதி இன் னது என்றும், அல்லகைக் குழப்பங்களைவிட்டு விலகும்வ கை இது என்றும் விரிவாகச்சொன்னார்கள். அன்றியும், தெய்வத்துவம், ஞானநெறியை அடையும்வகை, நான்கு வகைப் பூதமூலம், சேதனாசேதனங்களில் அப்பூதங்கள் பொதிந்துள்ள வகை, அவற்றைச் சார்ந்தவை என்னும் அ னைத்தையும்,தலீலை யும் ஹதீதை யும் மேற்கோளாகக் காட்டிக்காட்டிப் போதித்தார்கள். மெய், வாய், கண், மூக் கு, செவி என்னும் ஐம்பொறிகளும், ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புலன்களும் இவ்வகைப்பட் டவை என்றும் விவரப்படச் சொன்னார்கள், அதன்பின், அப் பொறிபுலாதிகளை அடக்கி ஒருமைப்பாடு பூண்டு சு லாக்கு நிலையில் நின்று செல்லும்வழியும், அவ்வழியின் பிரிவுகளும், உண்மையான ஒரு பொருளின் நாட்டத்தே குறிக்கொள்ளுதலும், அக் கொள்கைக்கு பற்குந் தன் மைகளும் மற்றவும் தெளிவுபடுமாறு தெரிவித்தார்கள். அன்றியும், காலம்,கருவி, கோலம், குணம், குணி என் னும் இவற்றின் கூறுபாடுகளும், ஸ்தூல சூக்குமவகையும் விளங்கத் தாட்டாந்த திருட்டாந்தங்களுடன் எடுத்துக் காட்டி உணர்த்தினார்கள். இன்னும், அல்லாகுத் தஆலா வை உவக்கின்ற தன்மையும், அதனை நிறைவேற்றி முடிக் குந் தன்மையும், அவனுடைய பொருத்தததைப் பெறுந் தன்மையும், பொருந்தும்வழியில் நிற்குக் தன்மையும், அ வனைக் காண்கின்ற தன்மையும், தோற்றப்படும் பொருள் களை இல்லாமையாக்கும் தன்மையும், மறுமைப் பலனை நி
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/292
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை