பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

117


வருகின்றது. பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் திரிக்கப் பெற்று விலைபேசப் பெறுகின்றன. ‘கல்விக்குக் கலைமகள்’ ‘செல்வத்திற்குத் திருமகள்’ – என்று கற்ற தமிழ்ப் புலவர்களும் தூயதமிழ் என்ற பெயரால் ஆரியத்தைப் பறைசாற்றுகின்றனர். அரசினர் சார்பில் வந்திறங்கும் அமெரிக்க, உருசிய, செருமானிய, சப்பானியப் பொறிகளும் இங்குள்ள ஆரியப் பார்ப்பான் ஒருவன் பூசனைகள் செய்த பின்னர்தாம் இயக்கப் பெறுகின்றன. ‘வானியல்’ ஆய்வு ஒருபுறம்; மழைபெய்ய ஆரிய வேள்விகள் ஒருபுறம், சாணியும் சோறும் பிசைந்துண்ணப் பெறுதல் போன்றதொரு நிலையை இவ்விந்திய நாட்டைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. நிலவில் அடி வைத்த காலத்திலேயே மாம்பலத்தில் தான்தோன்றிப் பிள்ளையாரின் கல்படிமம் ஒன்று நிலத்தினின்று வெடித்து வந்ததென்ற புரட்டு நடந்திருக்கிறதென்றால், ‘வேத’ காலத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்று சற்றே எண்ணிப் பார்த்தால் விளங்காமல் போகாது.

இவற்றிற்கெல்லாம் முடிவு என்ன? இவை இப்படியேதான் போய்க் கொண்டிருக்குமா? இப்படிப்பட்ட பிராமணீயத்திற்குத் தமிழன் அடிமைப்பட்டு ஏமாறத்தான் வேண்டுமா? அவனும் அவன் பிள்ளைகளும் என்றென்றும் அடிமைகளாக இத் தமிழ் மண்ணில் பிறந்து பிறந்து சாகத்தான் வேண்டுமா ? இவற்றிற்கெல்லாம் ‘ஆம்’ என்று ஆரியம் விடையிறுக்குமானால், நாம் அவர்களுக்குக் கூற – அல்லது எச்சரிக்க விரும்புவது – “இவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியிட்டாக வேண்டும்; அதுவும் இந்தத் தலைமுறையிலேயே வேண்டும்” என்பதுதான், அதன்படி, அவர்களின் பூணூல் முதலியவை கழற்றப்பட வேண்டும். கோயில் கருவறைகளினின்று ‘பிராமணியம்’ வெளியேற்றப்பட வேண்டும். தமிழ் மொழியினின்று ‘அது’ தூக்கியெறியப்பட வேண்டும். அரசின் காவலிலிருந்து அது விலக்கப்படவேண்டும். ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச’ ‘மநு’ முதலிய நூல்கள் எரிக்கப்பட வேண்டும். அவற்றைப் படிப்பது ‘குற்றம்’ என்று சட்டமியற்ற வேண்டும். இவை அத்தனையும் இந்தத் தலைமுறையிலேயே செய்யப் பெற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறையில் தமிழ் இருக்காது; தமிழனும் இருக்கமாட்டான். எனவே இதனைப் பிராமணீயத்திற்கு விட்ட எச்சரிக்கையாக மட்டும் கொள்ளாமல் தமிழர்க்கு விட்ட எச்சரிக்கையாகவும் கொள்ளுக.

– தென்மொழி, சுவடி : 8, ஒலை : 5–6, 1970