பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

121


திரிந்த வழிபாடுகளின் விரிந்த கூறுபாடுகளே! ஒரு கூம்பின் முனையை இயற்கை வழிபாட்டிற்கு இணையாகக் கூறினால், அதன் விரிந்த அடிப்பகுதியைச் சமயங்களுக்கு ஒப்பிடலாம். ஆரிய மதங்களின் ஊடுருவலுக்குப் பின்னர்தான் தமிழ் வழிபாடு தன் தூய்மையினின்று நெகிழ்ந்தது. இறைவழிபாட்டிற்கு மந்திர மாயங்கள் தேவையில்லை. இக்கரண முறை ஒரு திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் முன், பின் சடங்குகளைப் போன்றவையே! திருமண நிகழ்ச்சி மாந்த உலகியல் ஒழுக்கத்திற்குத் தேவையானது. ஆனால் இறைவழிபாடு வெறும் உலகியல் ஒழுக்க நிகழ்ச்சி மட்டுமன்று; இயற்கை நிகழ்ச்சி. ஆம், மூச்சை நாம் நம்மையறியாமல் உள்ளிழுத்து வெளிவிடுதலைப்போல் – நம்மையறியாமல் நம் அகப்புற உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் போல், நம்மையறியாமல் நாம் இறைப் பரம்பொருளை வழிபட்டுக்கொண்டும், அதனுள் நாம் ஊடுருவிக் கொண்டும் நம்முள் அஃது ஊடுருவிக்கொண்டுமாய் இருக்கின்றோம். இந்நிலையில் வழிபாடு எற்றுக்கு? மேலும் சிற்றறிவும் சிறுதொழிலும் கொண்ட சிற்றுயிர்களாகிய நம் வழிபாட்டைப் பேரறிவும் பெரும் பேராற்றலும் பெருவினையும் கொண்ட மெய்ப்பரம்பொருள் விரும்புவதென்பது ஒரு கற்பித நினைவே! இது நிகழ்ந்தாலும் ஒன்று தான்; நிகழவில்லையானாலும் ஒன்றுதான்; ஆனாலும் உலகியல் நடப்பின் ஒழுகலாறு வேண்டியும் சிற்றுயிர்களின் மனவளர்ச்சி வேண்டியும் மொய்ம்பு நிலை பெற்ற முனிவோர் கோயில் வழிபாடுகளைப் பொதுவியல் மாந்தர்க்குப் பொதுவென்றாக்கினார்.

இனி, வழிபாடே பொதுவென்பது உலகியற் பொதுவறமாய் இருக்க, அதைச் சமசுக்கிருதத்தில்தான் ஆற்றுதல் வேண்டும்; அதுவும் ஓர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டு தான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; அதுவும் ஓர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டுதான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; கடியத்தக்கவை; மீறினால் தண்டிக்கத் தக்கவை. எனவே கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்று பெரியதொரு புரட்சி மாற்றத்தைச் செய்து காட்டிய தமிழக அரசு, இவ்வாரியப் பார்ப்பனர்களின் அரற்றலுக் கெல்லாம் அஞ்சாமல், ஆரியப் பார்ப்பனர்கள் கோயில்களில் இடைத் தரகராயும் இருக்கத் தேவையில்லை என்பதையும் செயலுக்குக் கொணர்தல் வேண்டும். இரண்டுக்கும் ஒரே வகையான எதிர்ப்புத்தானே வரும். அதை மானமுள்ள தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள்.