பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இவ்விழாவில் அந்நூலை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் திரு. பட்டுவாரி – பேசுகையில், இன்று இந்தியர்களாகிய நாம் உலகில் மதிப்புடன் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் படைத்த வேதங்களும், வேதவாழ்வுமே காரணமாகுமென்றுற வேதப்பெருமையைப் பேசியுள்ளார்.

இப்படி அரசுச் சார்புள்ளவர்களெல்லாம் வேதங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது, இவ்விந்திய நாடு ஒரு வேத மத நாடு என்னும் கருத்தை உருவாக்குமேயன்றி, இங்குப் பலவகையான மதக் கொள்கைகளும் பண்பாடுகளும் உள்ளவர்கள் வாழ்வதாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்ததாகாது. இனி, வேதங்களைப் பற்றி அளவுக்கு மீறிய வகையில் பெருமை பேசப் பெறுகிறது. இந்திராகாந்தி எப்படிப் பொய்யுரைகளைப் பேசியே அரசியல் ஆளுமை பெற முயற்சி செய்தாரோ, செய்கின்றாரோ, அப்படியே ஆராய்ச்சியறிவற்ற பொய்யுரைகளைப் பேசியே காஞ்சி காமகோடி பீடத் தலைவராகிய சயேந்திர சரசுவதியும் இந்துமத ஆளுமையைப் பெற முயற்சி செய்கிறார்.

இந்துமத முயற்சிகள் என்னும் போர்வையில், ஆரியப் பார்ப்பனரின் வேதமதக் கொள்கைகளே வேர் ஊன்றப் பரப்பப்பெற்று வருகின்றன. வேதமதம் என்பதும் புராண மதம், பெளராணிக மதம் என்பவையும் ஒன்றே! அதுவே இக்கால் இந்து மதம் என்னும் என்னும் பெயர் பெற்று, இந்திய அரசியலிலும் குமுகாயத்திலும் பார்ப்பனியத் தலைமையை என்றென்றும் நிலையாக்கிக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுதே, பிராமணர்கள் விழிப்பாயிருந்து இந்து மதத்திற்கும், அது சார்ந்த சாதியமைப்புகளுக்கும் வேத, ஆகம புராண, இதிகாசங்கள் தழுவிய பிராமணியத்திற்கும் பெருங்காப்புச் செய்து கொண்டனர். இந்துமதம் என்பது எப்படி வேதமதமோ, அப்படியே ‘இந்து தர்மம்’ என்பதும் வேத தர்மமே! வேத தர்மம் என்பது பிராமண தர்மமே! பிராமண தர்மம் என்பது மனு முதலிய மிருதிகளின் தர்மமே! இனி மனுதர்மம் முதலிய பதினென் மிருதிகளும், பிராமணனே இங்குள்ளவர்களுக்குத் தெய்வம் என்பதையும், அவன் பேசும் சமசுக்கிருதமே தேவமொழி என்பதையும், சூத்திரர்களாகிய நாம் என்றென்றும் அவனுக்கும் அவன் மொழியாகிய சமசுக்கிருத மொழிக்கும் நிலையான அடிமைகள் என்பனவற்றையுமே வலியுறுத்தும்!

எனவே, இந்திய அரசியல் ஆளுமை முயற்சிகளில் இந்துமதக் கோட்பாடுகள் தலையிடாதபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். அதற்காகப் பலவகை முயற்சிகள் தேவை. மிகவும் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை நாம் செய்து