பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தங்களைப் பிராமணர்கள் என்றும் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நாளிலும் கூறிப் பெருமை பேசும் வெட்கங்கெட்ட இனம் சார்ந்த பார்த்தசாரதியார், சமசுக்கிருதத்தை வெறுப்பவர்களே தமிழறிஞர்களாக இத்தமிழ்நாட்டில் மதிக்கப் பெறுகின்றனர் என்று வயிறெரிந்து சாவது ? உண்மை அதுவன்று. அற்றைநாள் தமிழறிஞர்கள் சமசுக்கிருதத்தைத் தேவ மொழி என்று கைகட்டி வாய் பொத்தி வணங்கி வாழ்த்துப் பாடினர். அவர் வழி வையாபுரி, தெ.பொ.மீக்கள் தோன்றினர். இன்றுள்ள நிலை வேறு, தேவமொழியை மட்டுமன்று, தெய்வத்தையே ஆராயும் அறிவியல் காலம் இது. சமசுக்கிருதத்தின் உண்மை வரலாறு இங்குள்ள அனைவர்க்கும் தெளிவாகத் தெரிகின்ற காலம் இது. இந்நிலையில் அங்குள்ள இயல்பான வரலாற்று நிலைக்கு மேல் தெய்வீகத்தனம் கற்பித்துப் பேச, தமிழர்கள் இன்னும் குடுமி வைத்தவர்கள் அல்லர். இன்னும் சொன்னால் தமிழ், சமசுக்கிருதத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் விளக்கம் தேவையானால் கேளுங்கள்; தெரிவிக்கிறோம். மற்றபடி எழுதுவதற்குத் துக்ளக் போலும் இதழ்களும், அவற்றைப் பொதுமக்களிடம் பரவலாக விளம்பரப்படுத்த செல்வக் கொழுப்புடையவர்கள் பணமும், அதிகாரக் கொழுப்புள்ளவர்களின் ஆட்சியும் உள்ளதென்று தமிழ் மொழியையும் தமிழ் அறிஞர்களையும் தாழ்த்திப் பேச வேண்டா.

திரவிட மொழிக் குடும்பத்தை வடமொழிச் சார்பற்றவை என்று முதன் முதலிற் கண்டு காட்டியவர் கால்டுவெல் ஆவர். அவர்க்குப் பின் தமிழியல் வரலாறு மிகவும் தெளிவுபடுத்தப் பெற்று விட்டது. இதற்கு மேலும் தமிழ் சமசுக்கிருதத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்க முடியாது. அவ்வாறு கிடக்க சமசுக்கிருதம் தமிழைவிட மேம்பட்ட மொழியுமன்று. சமசுக்கிருத இலக்கணத்தின் தன்மை மிக மிகக் காட்டு விலங்காண்டித்தனமானது. ஓரிரண்டு எடுத்துக்காட்டிகளிலேயே இதை மெய்ப்பிக்கலாம். சமசுக்கிருத பாலியற் பாகுபாடு என்னும் இலக்கணக் கூறு ஒன்றில் உள்ள செயற்கைத் தன்மையைக் கீழ்வரும் சொற்களில் காணலாம்.

சமசுக்கிருதத்தில் அஃறிணைப் பொருளாகிய ‘கல்’ என்று பொருள்படும் 'பாஷாணம்' ஆண்பால். அதே கல்லைக் குறிக்கும் சிலா என்னும் சொல் பெண்பால். இன்னும் மனைவி என்று பொருள்படும் மூன்று சமசுக்கிருதச் சொற்களில் தார - ஆண்பால்; பார்ய - பெண்பால்; களஸ்திர - அலிப்பால். அதே போல் பொத்தகம் என்று பொருள்படும் மூன்று சொற்களில் கிரந்த - ஆண்பால்; ச்ருதி - பெண்பால், புஸ்தக - அலிப்பால். தத்கச்சதி