பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழக அரசின் மூடநம்பிக்கை!

இருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்
காலமா? புராண, இதிகாசக் காலமா?

இந்தியாவில் அறிவியல் வளர வேண்டும் என்று மெப்புக்குக் கூறும் குடியரசுத் தலைவர் வெங்கட்டராமனும், தலைமை அமைச்சர் நரசிம்மராவுந்தாம் விடை சொல்ல வேண்டும்.


டந்த 10.2.92 தொடங்கி, தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழ்ச் செய்தித்தாள்களிலும் தொடர்ந்து நான்கைந்து நாள்கள் முழுப் பக்கங்களில் வந்த விளம்பரம் இது.

புண்ணிய நீராடப் புறப்பட்டு வாரீர்!

“வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் வைபவம் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது.

மிகவும் சிறப்புக்குரிய புண்ணிய விழா நாளான 18.2.1992 அன்று மகாமகக் குளத்தில் பகல் பொழுதில் தீர்த்தவாரி நடைபெறும்.

புண்ணிய நதிகளான கங்கை யமுனை, நர்மதை, சரசுவதி, சிந்து, காவேரி, கோதாவரி, சரயு, மகாநதி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னியர்களாக வடிவெடுத்து மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி ஒரு முறை தோன்றி அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்”.