பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இத்தகையதொரு நிலைக்கு வந்ததால்தான் தி.மு.கவை. முன்பே தென்மொழி கண்டித்தது: குற்றமும் சாட்டியது. இன்று தி.மு.க. அதன் விளைவையும் உணர்ந்து திருத்திக்கொண்டு வருகின்றது. மேலும் தி.மு.க. தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய நிலைகளும் பலவுள. ஆனால் திருந்தாத தமிழனைவிடத் திருந்திவரும் தமிழனால் தமிழுக்கும் தமிழினத்திற்கும் ஓரளவேனும் ஆக்கம் பிறக்கும் என்னும் கருத்திலேயே தி.மு.க.வைத் தென்மொழி பாராட்டிக் காக்க முனைந்துள்ளது. (இந் நிலைக்குத் தென்மொழி மேல் கொதிபபடையும் ‘கண்ணதாச’த் தமிழர்கள் ஆழ்ந்து எண்ணி முடிவு கட்டுவார்களாக!).

நூல்கள் எழுதி வெளியிடுகின்ற வகையில் ஆரியப் பார்ப்பனர்கள் ஐந்து வகையான தந்திரங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவை:

வேத புராணங்கள்
வேறுவேறு வடிவில்!

ஒன்று தங்கள் புராண இதிகாசக் கருத்துகளைக் காலத்துக்கும் இடத்திற்கும் தக்கவாறு, வேறு வேறு வடிவங்களுடனும் முறைகளுடனும் மாற்றி எழுதி, அல்லது எழுதுவித்து வெளியிட்டுக் கொண்டேயிருப்பது.

இக்கால் அண்மையில் இறந்துபோன இராசாசிசுடப் பழைய இராமாயண, மகாபாரதக் கதைகளை ஒரு புதிய வகையில் படிப்பதற்கு விருப்புடனும், சுருக்கமாகவும் ஆரியர்க்குச் சார்பான இடங்களை மேலும் சிறிது கவர்ச்சியுடனும், விளக்கத்துடனும் எழுதி வெளியிட்டதும், அவற்றைக் கல்கியினத்தவர்கள் உலக முழுதும், பொதுவுடைமை நாடான உருசியாவிலும்கூடப் பரப்பி, இலக்கக் கணக்கான படிகளை விற்று வருவதும் இக்கருத்தை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். இதுதவிர லிப்கோ எனும் வெளியீட்டுக் குழுமமும் பலவகைகளில் இராமாயண மகாபாரதங்களையும் புராணப் புளுகுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

வெளிநாடுகளில் வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவன் இராசாசி போல் இராமாயண மகாபாரதங்களையா பிழைப்புக் கெட்டுப் போய் உட்கார்ந்து எழுதிக்கொண்டு கிடப்பான்? பிழைப்புக் கெட்டவன் கழுதையைப் பிடித்து சிரைத்தது போல, வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துச் சட்ட துணுக்கமும், அரசியல்