பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

49


உள்ளதோரூர்; வேம்பத்துரரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது” என்னும் குறிப்பெழுதி, கடைச்சங்கப் புலவர் காலந் தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார் என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனச் சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் துது செல்லுதற்குரியன் என்பது இவர் பாடலால் தெரியவருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல்தரையில் இவர் தம் இனப்பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

இனி, இவரைப் பின்பற்றித்தான் இவர் மாணாக்கர் கி.வ. சகந்நாதன் அவர்களும் அவரினும் மேலாக ஆழமாக இயங்கி வருகின்றார். அவர் பேசப்புகும் சில கூட்டங்களில் முன்னுரையாக “என் குருநாதராகிய மகாமகோபாத்தியாய தாகூவினாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் இட்ட பிச்சையால் சிறந்து விளங்கும் இத் தமிழ்மொழி” என்னுந் தொடரைப் பயன்படுத்தி வருகின்றார். ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் எத்துணை ஆழமாகத் தம் இனப் பெருமையை வேரூன்ற வைத்துள்ளார்கள் என்பதை அறிந்தால், நாம் நம் தமிழ்மொழிக்கே உரித்தான சிறப்பியல்களை எத்துணை ஆயிரம் முறை சொன்னாலும் பிழையில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

நாளிதழ்களிலும் நச்சு வேலைகள் !

ஆரிய நச்சுக் கருத்துகளை அவர்கள் நூல்களில் போன்றே அன்றாடம் அவர்கள் நடத்தும் நாளிதழ்களில் பலவகைகளிலும் பல துறைகளிலும் இன்னும் விடாப்பிடியாக நுழைத்து வருகின்றனர். தினமணி, சுதேசமித்திரன், விகடன், கல்கி, கலைமகள், கதிர், துக்ளக் முதலிய ஆரியக் கும்பல் இதழ்கள் தமிழ்மொழியையும், பண்பாட்டையும் திட்டமிட்டே அழித்து வருகின்றன.

‘கல்வி வாய்ப்புகளை விரிவாக்க முடிவு’ - என்பதைக் ‘கல்வி