பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

83


ஒவ்வோர் எழுத்தும் ஆரியப் பார்ப்பனரின் வலிந்த ஊடுருவலுக்காக அடிக்கப்பெறும் முளைக்குச்சியே! அவர் பேசித் திரியும் ஒவ்வொரு பேச்சும் ஆரியப் பார்ப்பனர்க்காக உயிர்க்கப்படும் வலிந்த மூச்சே யாகும். அவரிடத்துக் கொள்ளும் எவ்வகையான ஒப்பந்தமும் அவர் பிணிக்கும் கட்டுக்கயிறே ஆகும்! இவற்றைத் தமிழர் கடந்த பன்னூறு ஆண்டுகளாகவும் - இன்றும் உணராமற் போயினும் இனி வரும் எதிர்காலத் தமிழர் கட்டாயம் உணர்வர் என்பதில் துளியும் ஐயமின்று.

திரு. இராசாசியின் உருவில் அல்லது அவர் பேச்சின் உருவில் வெளிவரும் ஆரியச் சாணக்கியம் இந்தியாவையே அடிமை கொள்ளும் திறம் படைத்தது. அவர் அசைக்கும் ஒவ்வொரு விரலசைவுக்கும் ஏற்ற பொருத்தமான பொருளை, பனிமலையிலிருந்து குமரிமுனை வரை ஊடுருவிக் கிடக்கும் பார்ப்பனரே அன்றிப் பிறர் அறிய ஒல்லாது. அவர் கண்ணசைவிற்கும், கையசைப்பிற்கும் தனித்தனிப் பொருள்கள் உண்டு. அவரின் அமைதிக்கும், அவர் சீற்றத்திற்கும், நகைப்பிற்கும்கூடத் தனித்தனிப் பொருள்கள் பார்ப்பனர் தம் அகரமுதலிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சுருங்கக்கூறின் இந்தியப் பார்ப்பான் எந்த உருவில் இருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்கு இராசாசியின் அசைவிற்கும் பெருத்த தொடர்புண்டு. மொத்தத்தில் அவர் இக்கால ஆரியத் தலைவர். அவர் புன்னகை தமிழர் நலத்திற்கு முன் துரக்கப்பெறும் வாள் ஒளி! அவர் பாராட்டு தமிழர்க்கு வெட்டப்பெறும் படுகுழி! இந்தியப் பெரும்பரப்பில் உள்ள ஆரியப் பார்ப்பனரால் தமிழர் பெற்ற தொல்லையையும் துயரத்தையும் போல் வேறு எந்த இனத்தினரும் பெற்றிலர். அவர் தொடர்பால் தமிழர் இழந்த செல்வங்கள் பலப்பல. அவர் இழந்த பண்பாடுகள் பற்பல; நாகரிகங்கள் பற்பல; செப்பங்கள், செம்மாப்புகள், ஒழுகலாறுகள், உயர்வுகள் பற்பல! அவர்தம்மர்ல் தமிழர் வரலாற்றில் ஏறிய கறையை எத்தனை எத்தனை மறைமலையடிகள், திரு.வி.க.கள், பெரியார் இராமசாமிகள், அண்ணாத்துரைகள் தோன்றி அழுத்தி அழுத்தித் துடைத்தாலும் போக்கிவிட முடியாது. இவ்வுலகிலேயே பண்டைய கிரேக்கர், எகுபதியர் முதலிய பழைய நாகரிக மக்கள் பெற்ற பெருஞ்சிறப்புகளைவிடத் தமிழர் பெற்ற சிறப்புகள் ஏராளம் ! கொள்ளையோ கொள்ளை! ஆனால் அத்தனை பெருமைகளும், வளர்ந்து மணம் பரப்பிய அறிவு நிலைகளும் நாகரிக முகடுகளும் ஆரியப் பார்ப்பனர் என்ற நாடோடிக் கூட்டத்தால் சிதைக்கப் பெற்றன. இதனால் உலகமே