பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 7 இங்கிலாந்தில் இந்த சங்கீதம் நெடு நாளாக "பிரிட்டானியா அலை கடலை ஆள்கின்றது', 'கடவுள் நம் அரசனைக் காப்பாராக', பிரிட்டிஷ் மனம் போருக்குப் புறங்கொடுக்காது', 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை ' என்பன போன்ற கருத்துக்கள் அடங்கிய சாகித் தியங்களுடன் தான் பெரும்பாலும் சம் பந்தப்படுத்தப்பட்டு ஏகாதிபத்திய எண் ணத்தையும் ராஜ விசுவாசத்தையும் போர் வெறியையும் புகட்டுவதற்கே துணையாகப் பயன்படுத்தப்பட்டு திருக்கிறது. வந் அதே சங்கீதம் ஜெர்மனியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அடி யோடு வீழ்த்தி ஜெர்மன் ஏகாதிபத்தி யத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இச்சையைப் பரப்பக்கூடிய சாகித்தியங் களிலேயே இணைக்கப்பட்டு வந்திருக் கின்றது என்பது பிரசித்த விஷயம்.