இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது சேர்த்து வைத்துத்தான் கடவுளை வழி பட்டார்கள். ஏனைய நாடுகளில் கலைகளை எப்படி உபயோகப்படுத்தி யிருந்தாலும் தமிழ் நாட்டில் எல்லாக் கலைகளும் இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோயில் என்ற ஒரு எண்ணத்தையே வெவ்வேறு வழிகளில் இடைவிடாது பரப்பிச் சமூக வாழ்வின் சமாதானம் ஒன்றுக்காகவே உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின் றன. இதுதான் தமிழ் மரபு. நாமறிந்து தமிழ் காலத்து மற்றக் கலைகளை ஒருபுறம் ஒதுக்கி விட்டு எழுத்துக் கலையை மட்டும் எடுத் துக்கொண்டு இந்த மரபைப் பாருங்கள். இலக்கியமென்று எழுத்துக்களில், சங்க இலக்கியங்கள் ஆதியாக சுப்ரமண்ய பாரதியார் பாடல்கள் அந்தமாக எல்லா எழுத்தாளர்களும் இந்த மரபில் ஒளி மங்காதிருக்க ச் செய்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் எழுத்துக் கலையின் தனிச் சிறப்பு. அந்த மரபுக்கு மாறு