பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 13 கருதுகின்ற சில விஷயங்கள் தமிழ் மொழியின் பிறப்பு, அதன் வளர்ச்சி, தமிழின் தனிமை, தமிழும் ஆரியமும், ஆரியர் திராவிடர், தமிழ் நாடு, தமிழ் அரசு, தமிழ்ப் பண்பு என்பன. இவற்றுள் அபிப்பிராய பேதத் துக்கு இடமே இல்லாத உண்மைகளைப் பற்றியும் புதுப்புது அபிப்பிராய வேற் றுமைகளை வேண்டுமென்று கற்பனையா கப் புகுத்தித் தமிழ்மக்களின் மரபையும் மனசையும், மாண்பையும் கெடுக்க முய லும் தீங்கு தரும் பிரசாரங்களைத் தீர விசாரிக்க வேண்டும். இந்தத் தீங்கு தரும் பிரசாரத்தைச் செய்கிறவர்கள் எல்லாரும் தீயவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் மிகவும் நல்லவர்களும் உண்மைகளைத் திரிபாகத் தீர்மானித்துக் கொண்டு தெரியாம லேயே தீங்கு செய்து விடலாம். நான்