இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 19 கிறதே ஒழிய அந்த இலக்கணமும் நமக் குக் கிடைக்கவில்லை. எனினும் பாரதியும் அவருக்கு முன்னாலிருந்த எழுத்தாளர்களும் அகத் தியன்தான் தமிழுக்கு ஆதி இலக்கணம் செய்ததாக ஐயம் திரிபு இல்லாமல் நம்பி வந்திருக்கிறார்கள். அகத்தியருக்குப் பிறகு தொல்காப் பியர் என்பவர் 'தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணத்தைச் செய்தார். இந்தத் தொல்காப்பியம் அகத்தியரைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கருதப் படுவதால் இது அகத்தியத்தின் பிற் காலப் பிரதி என்றே பல அறிஞர்கள் எண்ணுகின்றார்கள். தமிழுக்கு இலக் கணம் செய்தவன் அகத்தியன் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழுக்கு இன்றளவும் கிடைத்துள்ள ஒரே இலக்கணமாகிய தொல்காப்பியத் தைச் செய்தவரைப் பற்றித் தமிழுக்கு இலக்கணம் செய்தவராகச் சொல்லப் படவில்லை. இந்தத் தொல்காப்பியம்