இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
22 அந்த ஆரியராவது நூலை எல்லாரும் படித்துப் பார்ப்பது நல்லது. இவர் சொல்லுகிற நாலாயிரத்து நானூறு ஆண்டுகள் தான் சரியென்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில், எல்லா ஆராய்ச்சிகளிலும் அனுமானங்கள் தான் அதிகம்.தொல் காப்பியத்தின் உண்மையான காலம் இதற்குக் குறைவாகவு மிருக்கலாம்;கூடு தலாகவும் இருக்கலாம். வருஷக் கணக்கு, எதுவாக இருந்தாலும் இந்தத் தொல் காப்பியமே அதன் பெயர் குறிக்கிற மாதிரி மிகப் பழைய இலக்கியம் என்ப தில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த அகத்தியனும் தொல்காப் பியனும் ஆரியர்கள் என்று அனுமா னித்துக்கொண்டு, இப்போது அரசியல் கட்சிச் சண்டைகளால் அதிகப் பட்டி ருக்கிற ஆரிய திராவிட நிபந்தனைகளை அவர்கள் தலையிலும் போட்டு அவ்விரு வரும் தமிழைக் கெடுத்து விட்டவர்கள் என்ற அபாண்டத்தால் தமிழ்மொழி யின் பெருமைக்குச் செய்யப்பட்டு வரும்.