பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 23 அநியாயத்தையும் அகற்ற வேண்டும். பிறமொழி அறிவு கொஞ்சமாவது உள்ள வர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். ஏன் எனில் ஆரியமொழி என்று சொல் லப்படுகிற (சம்ஸ்கிருதம்) வடமொழி யின் இலக்கணத்தையும் இந்தத் தொல் காப்பியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழி இலக்கணத்தின் வாடை கூடத் தொல்காப்பியத்தில் இல்லை. அப் படி யிருக்க வடமொழியைத் தமிழில் புகுத்தி அகத்தியரும் தொல்காப்பிய ரும் தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்பது அறிவின்மை.