இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழின் வளர்ச்சி தமிழ்மொழி என்பது மாங்காய் தேங் காய் போல மரத்தில் காய்த்து நம் கை யில் விழுந்துவிடவில்லை. கற்பனைக்கும் எட்டாத காலத்திலிருந்து அநேக ஆயி ரம் ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்ச மாக வளர்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் இறுகிய வயிரம். பின் வந்த தமிழர்கள் அதை இப்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவை பிரதிபிம் பிக்கும் பல முகமுள்ள பட்டை போட்ட வயிரமணியாகத் திகழச் செய்திருக்கின் றார்கள். எழுத்தாளர்கள் இப்போது அதற்கு இன்னும் மெருகேற்றி வரு கிறார்கள். இப்போது இருந்து வருகிற தமிழ் பழைய நிலைக்கே போகவேண்டு மென்று விரும்பினால், அது வயிரம் தன் னுடைய பழைய நிலைக்கே போய் கரியா கப் போவதைத்தான் காணும்.