இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 29 கடலோடி தூரதேசங்களோடு நெடுங் காலமாக வியாபாரம் செய்து கொண்டி ருந்தவர்கள் நாட்டில் வழங்கிய மொழி எப்படித் தனித்தமிழாக இருந்திருக்க முடியும்? அக்காலத்துத் தமிழர்களுடைய கடல் வியாபாரத்தைப் பற்றியும் அவர் களுடைய துறைமுகங்களைப் பற்றியும் அயல் நாட்டுச் சரித்திர ஆசிரியர்களான 'ப்ளைனி' 'தாலமி' என்பவர்கள் எழுதி யுள்ள சேர, சோழ, பாண்டிய நாட்டின் குறிப்புகளும் எகிப்து. சரித்திரக் தேசத்து அறிஞர் ஒருவர் எழுதியுள்ள 'பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரேய்' என்ற நூலும் வெகு தெளிவாகச் சொல்லு கின்றன. அவற்றில் சொல்லப் படுகிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுடைய பெயர்கள் அப்படியே சங்ககால இலக் கியங்களில் இருப்பதைக் காணலாம். ஆகையால், அ வ்வளவு அயல் நாட்டு சம்பந்தங்கள் வைத்துக் கொண் டிருந்த தமிழர்களின் மொழி அக்காலத் திலும் கூட ஒரு தனி மொழியாக இருந்