இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
32 ஆரியராவது தார். அந்தப் புண்ணியமூர்த்தி என்ப வர் ஒரு கப்பல் வியாபாரி. அவருக்கு வியாபாரப் போட்டியில் சில பகைவர் உண்டு. அப்பகைவர்கள் சில ஆட்களை ஏவி, துறைமுகத்தில் சரக்குகளோடு இந்தியாவுக்கு புறப்படத் தயாராக இருந்த புண்ணிய மூர்த்தியின் மரக்கலம் ஒன்றிற்குத் தீ வைக்கச் செய்து விட் டார்கள்.அப்படித் தீ வைக்கத் தோணி யில் சென்று தீ வைத்து விட்டுத் திரும்பி வந்த ஒருவன் விடியற் காலையில் கடற் கரை ஓரமாக இரைக்க இரைக்க ஓடி வந்து கொண்டிருந்தான். (நடு ராத்திரி யில் தீ வைக்கத் திட்டம் போட்டிருந்த அவன் தூங்கிப்போய் பின்னிரவில் சென்றபடியால் விடியற்காலம் நேர்ந்து விட்டது.) ஆறுமுக நாவலரவர்கள் தினந்தினம் விடியுமுன் எழுந்து இருட் டாக இருக்கும்போதே கடற்கரையில் உலாவுவது வழக்கம். அன்றையதினம் அப்படி உலாவிக் கொண்டிருந்தபோது