பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 ஆரியராவது வர்களை யெல்லாம் விட்டுவிட்டு புது ஆசாமி ஒருவனைப் பிடித்தார்கள். அவன்தான் அந்தக் குற்றவாளி. அந் தக் கேஸ் விசாரணைக்கு வந்தது. அதில் ஆறுமுக நாவலர் ஒரு சாட்சி. சாட்சியம் சொல்லக் கூண்டில் வந்து நின்றார். நாவலர் ஒரு கருத்த மனிதர். வழுக்கைத் தலை. நெற்றி நிறைய விபூதி. கழுத்தில் தங்கச் சரட் டில் கோத்த ஓர் உத்ராக்ஷம். இடை யில் ஒரு சாதாரண வேஷ்டி. மேலே ஒரு துண்டு. இரண்டும் C தாய்த்துத் தோய்த்துக் காவி ஏறி யிருக்கும். ஆடம்பரமே இல்லாமல், பார்ப்பதற்குப் படிப்பு வாசனையே துளிக்கூட இல்லாத ஒரு பட்டிக் காட்டானைப் போல காட்சி அளிப்பார். சாட்சியம் சொல்ல நீதிபதியின் முன் நின்றார். நீதிபதி ஒரு பரங்கிக் காரர்.(ஆங்கிலோ இந்தியர்) முதல் இரண்டொரு கேள்விகளுக்கு நாவலர் இங்கிலீஷில் பதில் சொன்னார். உடனே