இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 37 சொல்லுவதை நீ மொழி பெயர்த்துச் சொல்லு" என்றார். மயில்வாகனம் என்பவர் நாவலருக் குக் காட்டிய வணக்க ஒடுக்கத்தைக் கண்ட நீதிபதி வியந்தார். அதற்குப் பிறகுதான் ஆறுமுக நாவலரைப் பற்றிக் கேட்டறிந்து அவர் 'பைபிளை மொழி பெயர்த்தவர்' என்பதைத் தெரிந்து அவர் ஆங்கிலத்திலேயே சாட் சியம் சொல்லலாம் என்று உத்தர விட்டாராம். ஆனால் நாவலர் ஆங்கிலத் தில் பேச மறுத்துவிடவே பிறகு மயில் வாகனம் என்பவரே மொழி பெயர்த்தா ராம். அவருக்குச் சாதாரணத் தமிழில் நாவலர் சாட்சியம் சொன்னாராம். அதே யாழ்ப்பாணத்தில் இன் னொரு நிகழ்ச்சி சபாப நாவலர் என்பவரும் யாழ்ப்பாண வாசி. ஆறுமுக நாவலருக் குச் சமகாலத்தவர். வடமொழியிலும் தமிழிலும் மிகவும் வல்லவர். வட