பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 39 அருகிலிருந்த மாணாக்கர்கள் அந்த அம்மாள் நாவலரை உளறுவதாகச் சொன்னதைக் கேட்டு வருந்தி, அந்தப் பெண்ணுக்கு அவர் பெருமையைச் சொல்லி நாவலர் தேங்காயின் விலை கேட்பதாகச் சொன்னார்கள். அது கேட்டு அந்த அம்மாள் வி லையைச் சொன்னாள். அந்த விலை மிகவும் அதி கம் என்பதற்கு நாவலர், "சாலவும் மிகை; மூவிரு செப்புக் காசுகள் கோடி" என்றார். "கோடியாவது, கரையாவது, உங்க எலக்கண மெல்லாம் எனக்கென்ன தெரியும்? நல்லாச் சொல்லுங்களேன்" என்றாளாம் அந்த அம்மாள். இதற்குள் நாவலர் வேறொரு கடைக்குப் போய் விட்டாராம். இந்த இரண்டு நிகழச்சிகளையும் சொன்னவர் ஸ்ரீ பவானி ஆச்சியார் என்ற எண்பது வயதான அம்மையார். அவர் ஆறுமுகநாவலர் அவர்களுடைய மாணாக்கருள் ஒருவர். ஒருவர். சிதம்பரத்தில்