இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
40 ஆரியராவது ஆறுமுக நாவலர் அவர்கள் ஸ்தாபித்து கடந்து வருகிற சேக்கிழார் மடத்தில் இன் றைக்கும் ஜீவந்தராக இருந்து வருகிறார். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் கடுந் தமிழ்ப் பதங்கள் உலவி வந்த, இப்போதும் உலவி வருகிற யாழ்ப்பா ணத்திலேயே இந்த நடை புரிய வில்லை யென்றால், இப்போது இங் குள்ள நமக்கு அது எப்படிப் பயன் படும்? இப்படிப்பட்ட நடையைத் தனித் தமிழ் என்று எண்ணிக்கொண்டு எடுத் தாள்வது படித்தவர்களுடைய ஆராய்ச் சிக்கும் அறிவுக்கும் இன்பமளிக்கலாம் என்றாலும் உலகத்துக்கு உபயோகப் படாது. மொழிகளை உண்டாக்குவது பண்டிதரும் இலக்கண வித்வான் களும்தான். ஆனாலும் அதை வளர்த்து வாழ வைக்கிறவர்கள் பாமர மக்களே. பாமரருக்குப் பழக்க மில்லாத எந்த நடையும் விரைந்து மறைந்து விடும். இதனால் நான் பிற மொழிப் பதங் களையே பெரிதும் உபயோகப்படுத்த