இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 41 வேண்டுமென்று சொல்லுவதாக எண்ணிவிடக் கூடாது. ஆனால் எல்லோ ருக்கும் எளிதில் புரியக் கூடிய எந்தப் பதத்தையும் அதைப் பிறமொழிப் பதம் என்பதற்காக விலக்க முயல்வது விரும் பத்தக்கதல்ல. மற்றவர்கள் இதைப் பற்றி எப்படி எண்ணினாலும் எழுத்தா ளர்கள் கடின நடையை நீக்கவேண்டும். தமிழோடு தமிழாகக் கலந்துவிட்ட பிற மொழிப் பதங்களைப் பொறுக்கி நீக்கு வது பிழை. உதாரணமாக தமிழுக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் அங்கமாகச் சொல்லிக்கொண்டு வருகி றோம். இவற்றுள் இயல், இசை என்ற இரண்டு பதங்களும் தமிழ்ப் பதங்கள். நாடகம் என்பது வடமொழிப் பதம். அது வடமொழிப் பதம் என்று சொன்ன பிறகுதான் அது வடமொழியா என் கேள்வி பல பேருக்குள் எழும். ஆம்; அது வடமொழிதான். இதைத் தமிழாக் கினால் 'கூத்து ற கூத்து' என்றுதான் சொல்ல வேண்டும். கூத்து என்றால் மேடை