பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 ஆரியராவது இல்லாமல், படுதா இல்லாமல்,சீன்கள் இல்லாமல், தெருக்களில் நடக்கும் கூத்துதான் நினைவுக்கு வருமே யல்லாமல் நாடக மேடை நமக்குத் தோன்றாது. 'கலை' என்ற என்ற சொல்லும் அப் படித்தான். 'கலா' என்ற வடமொழிப் பதத்தின் தமிழ் வடிவம்தான் 'கலை' என்பது. 'கலை' என்பது வடமொழி சம் பந்தமுள்ளதாயிற்றே என்று எண்ணி னால் அதற்கு மாற்றாக நல்ல தமிழ்ப் பதம் இப்போது வழக்கில் இல்லை. கூடுமான வரையிலும் தமிழ்ப் பதங் களுக்கே இடந் தரவேண்டும் என்பது மிகவும் போற்றத் தகுந்த முயற்சி. அதை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும். கலைச் சொற்கள் என்று எவருக்கும புரி யாத வடமொழிப் பதங்களைக் கொண்டு வந்து தமிழில் திணிக்க விடுவதைக் காட் டிலும் 'வானொலி ' என்பதைப்போன்ற நல்ல தமிழ்ப் பதங்களை உண்டாக்க வேண்டும் என்பது சிறந்த முயற்சி.