பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திசைச் சொல் இலக்கணம் தமிழ் நாட்டில் சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுகளுக்கே அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பதும் மிகவும் சரியான கோரிக்கை. ஆனால் பிறமொழிப் பதங்கள் என் பதற்காக மட்டும் எதையும் வெறுத்து விலக்க வேண்டும் என்னும் பிரசாரத்தை யும் விலக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரசாரங்களில் கலந்திருக்கிற அன்பற்ற வம்பு நிறைந்த வார்த்தைகளை எண்ணித் தான் சொல்லுகிறேன். இவற்றை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். தனித் தமிழ் என்று ஒரு தமிழ் இல்லையானாலும் தமிழுக்குத் தனித் தன்மையான சிறப்புண்டு. அது ஏனைய மொழி எதற்கும் இல்லாத சிறப்பு. தமி ழின் தனிமை அதிலேதான் இருக்கிறது. அது என்னவென்றால், எந்த திசைச்