பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 ஆரியராவது சொல்லையும் தன் இனத்தோடு சேர்த்து வாழ வைத்தல். பிறமொழிப் பதங்கள் கலக்கத்தான் நேரும். பிறமொழியி லுள்ள நல்ல கருத்துக்களையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். அப்படிச் சேர்த்துக் கொண்டால்தான் மொழி செழித்து வளர்ந்து இறவாமல் இருக்கு மென்று எண்ணியே நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் 'திசைச் சொல் இலக்கணம்' என்ற பகுதியைச் சேர்த் தார்கள். இந்த இலக்கண வசதியால் பிற் காலத்திய புலவர்கள் தமிழுக்கே தனிச் சிறப்பான பலவித சந்தங்கள் உள்ள புதுப்புதுப் பிரபந்தங்களை உண்டாக்கி னார்கள். அந்தப் பிரபந்தங்களின் வகை கள் கோவை, உலா, அந்தாதி, கலம் பகம், மும்மணிக்கோவை, நான்மணிக் கோவை, இரட்டை மணிமாலை, நான் மணிமாலை பிள்ளைத்தமிழ், தூது என 96 வகைப்படும். இந்தப் பிற்கால இலக்கி யங்களில் அடங்கியுள்ள சந்தங்கள்