இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழும் ஆரியமும் தமிழும் வட மொழியும் தனித்தனி மொழிகளாக இருந்திருக்கின்றன என் பது மட்டும் தெரிகிறது. ஆனால் தமிழில் சம்ஸ்கிருதம் எப்போது கலந்த தென்று எவராலும் சொல்ல முடியாது. வடமொழியிலுள்ள இலக்கணக் குறைவு தமிழில் கலக்கக் கூடாதென்றே வடமொழி இலக்கணத்தை நன்றாக அறிந்த தொல்காப்பியனார் எல்லா விதத் திலும் வடமொழி இலக்கணத்துக்கு முற்றிலும் வேறான இலக்கணத்தைத் தமிழுக்குச் செய்ததாகத் தொல்காப் பியத்துக்குப் பாயிரம் பனம்பறனார், பாடின "வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படாமை யோனே!"