பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஆரியராவது


-களுக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. சஞ்சிகைகளும் அதிகமாக சஞ்சரிக்கின்றன. அச்சடிப்போரும் வெளியிடுவோரும் பற்பல நூதனமான வண்ணங்களை நுழைத்து வருகிறார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் இவற்றுக்கு அவசியமான எழுத்தாளர்களோடு கூடவே சித்திரக்காரர்களும் சிறப்படைந்து வருகிறார்கள். ‘போட்டோ கிராவ்’ வேலையும் ‘ப்ளாக்’ செய்யும் வேலையும் எழுத்தாளர் வேலைக்கு ஏற்றமுண்டாக்கி அதனால் தாமும் வளர்ச்சியடைகின்றன. இவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பாக வசனநடை வளர்ச்சிக்கு நல்லகாலம் வந்திருக்கிறதென்றே நம்பலாம்.

எழுத்தாளர் என்று சொல்லும்போது இயல், இசை, நாடகம் என்ற மூன்று நடைகளையும் எண்ணித்தான் பேசுகின்றோம். இந்த மூன்றில் எந்த