________________
திராவிடராவது 47 என்று பாடியுள்ளார். இதில் கூறப் படும் 'ஐந்திரம்' என்பது இந்திரனால் செய்யப்பட்டதாகச் சொல்லுகிற ஒரு சம்ஸ்கிருத இலக்கண நூல். இதில் ஐந் திரம் என்னும் இலக்கணத்தை நன்றாக அறிந்த தொல்காப்பியர் தமிழுக்கு மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி னான் என்பது குறிப்பிடத் தகுந்தது. என்றால், இப்படித் தனி இலக்கணத்தோடு தீகழ்ந்த தமிழில் எப்போது வடமொழி கலந்தது என்று சொல்ல முடியவில்லை. இது எதனால் என்றால், வடமொழி கலவாத் தமிழ் இலக்கியம் என்று சொல்லப்படுகிற புறநானூறு ; என்ற நூலுக்கு முன்னாலேயே தமிழ் மக்களுள் வடமொழி சம்பந்தங்கள் வந்துவிட்டதாக நிச்சயமாகத் தெரிகிறது. எப்படியென் றால் 'புறநானூறு' என்ற நூலில் உள்ள சில தமிழ்ப் புலவர்களின் பெயர்களையும் அரசர்களின் பெயர்களையும் பாருங்கள்: புலவர்கள்: (1) பிரமனார் (2) பெருந்தேவனார் (3) பெருஞ் சித்திர