பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 49 காலம் என்று மதிக்கப்படுகிற நாலா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட மொழி சம்பந்தம் தமிழுக்கு வந்து விட் டது கண்கூடாகத் தெரிகிறது. இனி வடமொழிப் பதங்களும் அப் பதங்களைக் காட்டிலும் வடமொழிக் கருத்துக்களும் தமிழில் கலந்ததை கவ னிப்போம். தமிழுக்குத் தலைசிறந்த நூல்களுள் முதன்மை பெற்ற திருக்குறளில் 'அகரம் முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதற் குறளில் ஆதி 'பகவன்' என்பதில் வடமொழிப் பதங்கள் கலந்திருப்பது மட்டுமல்லாமல் பின்னாலுள்ள குறள்களில் வடமொழிக் கருத்துக்களும் கதைகளும் சம்பந்தப்பட் டிருக்கின்றன. 'இந்திரனே சாலும் கரி' என்று சொல்லுகிறார், 'மடியிலா மன்னன் எய்தும் அடியளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு' என்னும் குற ளில் & அடியளந்தான்' என்பது மூன் LIIT-4