பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 3629 51 சில உதாரணங்களை மட்டும் பார்ப் போம். பல நூறு ஆண்டுகளாகத் தமி ழர்கள் 'பத்தினிக் கடவுள்' என்று பணிந்து வந்திருக்கிற கண்ணகியின் கதையைப் படிக்கத் தெரியாதவர்களும் அறிவார்கள். கோவலனும் கண்ணகி யும் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு மதுரைக்கு வந்து மதுரையின் எல்லைப் புறத்திலுள்ள ஆயர்பாடியில் மாரி என்ற மங்கையின் ஆதரவு பெற்று அவள் வீட்டில் தங்குகிறார்கள்.மாரியின் மகள் ஐயை என்பவள் கண்ணகிக்கு பணிப் பெண் போல் உதவினாள். அவ ளுடன் அந்த வீட்டில் கண்ணகியை விட்டு விட்டு கோவலன் சிலம்பு விற்க மதுரைக்குப் போய் விடுகிறான். போன கோவலன் திரும்பி வரவில்லை. மாத ரிக்குப் பல கெட்ட சகுனங்கள் தோன் றுகின்றன. ஏதோ உற்பாதம் வரப் போகிறதென்று அஞ்சி ஆயர்கள் கண் ணகியின் நலத்தைக்கோரி மகாவிஷ்ணு வைக் கருதி உற்பாதங்களுக்கு உப