இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
54 ஆரியராவது லேயே தமிழர்களுடைய வாழ்வில் இந் தக் கதைகள் கலந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். எந்த. ஆரியன் இந்த வடமொழிக் கதைகளை மூட்டை கட்டிக்கொண்டு வந்து தமிழில் புகுத்தி யிருக்க முடியும்? தமிழைக் கெடுக்க எண்ணிய இளங்கோ வடிகளின் கையைப் பிடித்து இவற்றை எழுதக் கட்டாயப் படுத்தியிருக்க முடியும்? ஆகையால் இந்த ஆரியக் கதைகளை யாரோ வடநாட்டார் வந்து தமிழில் புகுத்தி விட்டார்கள் என்பது வெறும் பொய். சிலப்பதிகாரத்தின் காலத் துக்கு வெகு காலம் முந்தினதாகச் சொல்லப் படுகிற தொல்காப்பியத்தில் நிலப்பரப்பை - முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல்,பாலை என்ற ஐந்து இனங்க ளாகப் பிரித்து, அவற்றுள் பாலை என் பது மக்களுக்குப் பயனற்றதான வெறும் மணற்பரப்பாக இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற நான்கையும்