இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 55 மட்டும் வசிப்பதற்குத் தகுந்தனவென்று ஒன்று சேர்த்து, நானிலம் நான்கு. நிலங்கள் - என்று தமிழிலக்கியங்களில் உலகம் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலத்திணை வகுப்புத் தமிழுக்கே தனி வழக்கமானது. மற்ற எந்த மொழி இலக்கியத்திலும் இந்தத் திணை வகுப் பைக் காண முடியாது. இந்த நான்கு இனத்துக்கும் வெவ்வேறு வழக்கங் களும், தொழில்களும் தெய்வங்களும் வகுக்கப் பட்டிருக்கின்றன. அந்தத் தெய்வங்கள் எல்லாம் வடமொழி சம்பந் தமான தெய்வங்களாகவே இருக்கின் றன. அதன் உண்மையை இந்த நான் நிலங்களின் அதிகாரத் தேவதைகளைக் குறிப்பிடும் முறையில், கு "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்* என்று தொல்காப்பியம் குறிக்கிறது. இந்தத் தெய்வங்கள் முறையே